மதுரை ரயில் தீ விபத்து || தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை.!! ₹ 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆன்மீக சுற்றுலாவுக்காக பார்ட்டி கோச் என்ற ரயில்வே திட்டத்தின் கீழ் ஒரு பெட்டி முழுவதையும் முன்பதிவு செய்து அதில் தங்களின் பயணத்தை தொடங்கியுள்ளனர். கடந்த 17ம் தேதி இவர்களின் பயணம் தொடங்கிய நிலையில் நாகர்கோவிலில் இருந்து சென்னை வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக 90 பேர் கொண்ட குழுவினர் மதுரை வந்தடைந்துள்ளனர்.

அங்கு ஸ்டேப்லிங் லைனில் நிறுத்தப்பட்டு இருந்த அவர்கள் பயணித்த பெட்டியில்  வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரை சட்டவிரோதமாக சமைப்பதற்காக பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ரயில் பெட்டி முழுவதும் தீ பரவியுள்ளது.

இதனை அடுத்து ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பெட்டியில் இருந்து கீழே குதித்து ஓடியுள்ளனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில் "26.08.2023 அதிகாலை 5.15 மணி அளவில் மதுரை யார்டில் உள்ள தனியார் பார்ட்டி கோச்/தனி நபர் கோச்சில் தீ விபத்து ஏற்பட்டதாக நிலைய அதிகாரி தெரிவித்தார். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அதிகாலை 5.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் காலை 7.15 மணிக்கு தீ முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தனியாரால் வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்த பெட்டிகள் ரயில் எண் : 16730 கொண்ட மதுரை விரைவு ரயிலில் (புனலூர் _ மதுரை எக்ஸ்பிரஸ்) நேற்று மாலை நாகர்கோவில் சந்திப்பில் இணைக்கப்பட்டு 3.47 மணிக்கு மதுரை வந்தடைந்ததும் அந்த பெட்டி தனியாக பிரிக்கப்பட்டு ஸ்டேப்லிங் லைனில் நிறுத்தப்பட்டது.

அப்போது ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் சட்ட விரோதமாக எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி லக்னோவில் இருந்து பயணத்தை தொடங்கியவர்கள் சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் மூலம் நாளை சென்னைக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.

அங்கிருந்து லக்னோ திரும்பவும் முடிவு செய்திருந்தனர்" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் "தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. தீ விபத்தில் படுகாயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Railway announced Rs10lakh compensation in Madurai train fire accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->