அதிமுக நிர்வாகி தலைவராக இருக்கும் கூட்டுறவு வங்கியில் ரெய்டு.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கடந்த 105 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் நகர கூட்டுறவு வங்கி அறந்தாங்கி நகரில் 2 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் பலகோடி ரூபாய் அளவிற்கு வரவுசெலவு செய்யப்படுகிறது. நேற்று காலை அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் வருமானவரித்துறை அதிகாரிகள் 11 பேர் திடீர் ஆய்வு இரவு வரை தொடர்ந்து நடைபெற்றது.

மேலும் கூட்டுறவு வங்கியில் பணியாற்றக்கூடிய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவரும், கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த ஆதிமோகன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த ரைடு குறித்து பேசி அவர் "தமிழகத்தில் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் கோர் பேங்கிங் செய்யப்பட்டு வங்கிகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான பண பரிவர்த்தனைகள் நடைபெற்றால் அது வருமான வரித்துறையினருக்கு கணிணி மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் கோர் பேங்கிங் செய்யப்படாத சில கூட்டுறவு வங்கிகளில் இன்னும் நோட்டு புத்தக அளவிலேயே வரவு செலவு எழுதி வைக்கப்படுகிறது. அவ்வாறு கோர் பேங்கிங் செய்யப்படாத வங்கிகளிலிருந்து வரவு செலவு கணக்குகள் வருமான வரித்துறையினரால் அறிய முடியாததால் ஆய்வு மேற்கொள்வது வழக்கமான ஒன்று தான்.

அந்த வகையில் அதிகாரிகள் அனைத்து கணக்கு வழக்குகளையும் சரிபார்த்து சரியாக உள்ளது என கூறிவிட்டு சென்றனர்.  கூட்டுறவு வங்கிகளை நவீனபடுத்த சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் வங்கிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வசதிகள் செய்ய வேண்டும்" என ஆதி மோகன் கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raid on cooperative bank headed by AIADMK executive


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->