பெரியார் படத்துக்கு உதவி செய்ததே ரஜினி தான்... ரஜினிக்காக களத்தில் இறங்கிய லாரன்ஸ்..!  - Seithipunal
Seithipunal


டந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் சம்பவம் ரஜினி பெரியாரை பற்றி பேசியது தான். இது குறித்து பல தரப்பில் இருந்தும் ரஜினிக்கு எதிராக கோஷமிட்டு வந்தார்கள். இந்த நிலையில் ரஜினியை யார் பேசினாலும் உடனே களத்தில் இறங்கும் லாரன்ஸ், தற்போதும் ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பதிவிட்டிருக்கிறர். 

அதில் “அனைவருக்கும் வணக்கம்! எனக்கு அரசியல் தெரியாது!
ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும்!
திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பொறுத்தவரை,
யார் மனதையும் நோகும் படி பேசக்கூடியவர் அல்ல!
ஏன் அவரை திட்டுபவர்களைக் கூட பதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர்!
எதையும் ப்ளான் செய்தோ, திட்டமிட்டோ அவதூறாக பேசக்கூடியவர் அல்ல!
ஆனால் பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டதாக கூறுகின்றனர்,

Image result for rajini seithipunal

மேலும், “அப்படி பேசக்கூடியவர் என்றால் 2006 ஆம் ஆண்டு பெரியாரின் தீவிரத்தொண்டரான இயக்குநர் திரு வேலு பிரபாகரன் அவர்கள், “பெரியார் கருத்துக்களை தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது திரு வேலுபிரபாகரனே எதிர்பாராத பெரும் தொகையை கொடுத்து, அந்த படத்தை வெளியிட எதற்காக ரஜினி சார் உதவி செய்ய வேண்டும்? பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் திரு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்கள், எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! அன்புடன்…. ராகவா லாரன்ஸ்.” என ராகவா லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raghava lawrence tweet about rajini


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->