போதை மாத்திரை விற்பனை செய்த 3 சமூக விரோதிகள் கைது.. புதுக்கோட்டை காவல்துறை அதிரடி.!! - Seithipunal
Seithipunal


போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேர் கொண்ட கும்பல், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டது.

புதுக்கோட்டை நகர பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் போதை மருந்துகள், மாத்திரைகள் போன்ற பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் இளைஞர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின் பேரில், காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். புதுக்கோட்டை நகர காவல் எல்லைக்குள் உள்ள 3 காவல் நிலைய அதிகாரிகள் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். 

இதன்போது, புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக திருக்கோகர்ணம் காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். 

மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர், இவர்களிடம் இருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pudukkottai Drug Sales 3 Man Gang Arrested by Police 5 Oct 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->