சிதம்பரம் கோயில் கனகசபை விவகாரம்.. தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக பொதுநல வழக்கு.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோவிலில் உள்ள கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்வது தொடர்பான பிரச்சனை பலன் ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. பக்தர்கள் கனகசபையின் மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய சிதம்பரம் நடராஜர் கோவில் தீக்ஷதர்கள் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையின் மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதித்து அரசாணை வெளியிட்டது. ஆனால் சிதம்பரம் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வராததால் கடும் எதிர்ப்பு எழுந்தது.

கடந்த 1959 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 107ன் படி இந்து சமயத்தில் உட்பிரிவுகள் நிர்வகிக்கும் கோவில்களில் தமிழக அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதை மிகத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியிலும் சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர 2009 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பு வழங்கியதை அடுத்து 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு அரசாணையை திரும்ப பெற்றது. அதனை தொடர்ந்து தற்பொழுது திமுக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆனால் ஒரே நேரத்தில் 7 முதல் 10 பேர் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே கனகசபை உள்ளது. திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோயிலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும். மேலும் தமிழக அரசின் அரசாணை, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது. எனவே தமிழக அரசின் இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public interest litigation against TNgovt GO in Kanakasabha issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->