போதை தலைக்கேறி, தனது மகள்கள் என்று கூட பார்க்காமல் கொடூர தந்தை செய்த செயல்.! கதறும் தாய்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி செல்வராணி இந்த தம்பதியினருக்கு ஹேமவர்ஷினி என்ற 15 வயது மகளும், ஸ்ரீஜா என்ற 8 வயது மகளும் உள்ளனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் செல்வராணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஒரு கை மற்றும் கால் வாதத்தால் முடங்கிப்போயிருக்கிறது. இந்நிலையில் பத்மநாபனின் அம்மா பிரேமா என்பவர்தான் குழந்தைகளைக் கவனித்துவந்துள்ளார்.

மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டதிலிருந்து பத்மநாபனுக்கும், செல்வராணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுகொண்டே இருந்தது.மேலும் பத்மநாபன் குடிக்கு அடிமையானதால், தினமும் செல்வராணியுடன் சண்டை போட்டு அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

மேலும் இதுகுறித்து போலீசாருக்கு புகார் அளித்த நிலையில் உனது கணவருடன் இருப்பது பாதுகாப்பு இல்லை என்று கூறி செல்வராணியை அவரது அம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

         

அப்பொழுது செல்வராணி தனது குழந்தைகளையும் தன்னுடன் கூப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கு குழந்தைகள் அப்பா போதையில் தனியாக இருக்கிறார். ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? நாங்கள் வரவில்லை என்று கூறியுள்ளனர்.அதனால் செல்வராணி குழந்தைகளை அங்கே விட்டு சென்றுள்ளார்.

பின்னர் இன்று காலை, செல்வராணியின் தாய் குழந்தைகளை காண வீட்டுக்குள் சென்றுள்ளார்.ஆனால் நீண்ட நேரமாகியும் குழந்தைகள் எழுந்திருக்காமல், அசைவற்று கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குழந்தைகளை எவ்ளோ எழுப்பியும் எழுந்திருக்கவில்லை, இறந்து கிடந்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர்  உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதில் குழந்தைகள் மூச்சு விடமுடியாமல் இருந்ததாகவும், மேலும் குழந்தைகளை தூங்கும்போது தலையணையை வைத்து அழுத்திக் கொலை செய்திருக்கக்கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு குடித்துவிட்டு போதை தலைக்கேறி, பத்மநாதன் குழந்தைகளை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

English Summary

psycho father killed daughter


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal