'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியிட்டு விழாவின் அசத்தலான புகைப்படங்கள் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


அமரர் கல்கியின் புகழ்பெற்ற, வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை மையமாக வைத்து இயக்குநர் மணிரத்னம் படமாக்கி வருகிறார்.

இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஜெயராம், அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 

படத்தின் திரைக்கதையை மணி ரத்னம் - குமரவேல் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் - ஏ.ஆர். ரஹ்மான்.

வசனம் - ஜெயமோகன், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த திரைப்படத்தின்  டீசர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் பலரும்  கலந்துகொண்டனர்.  நடிகர் விக்ரம் உடல்நலக் குறைவு காரணமாக  கலந்துகொள்ளவில்லை. இந்த விழாவின் புகைப்படங்களை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PS 1 pics


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->