சொத்துவரி மோசடி விவகாரம்.. மதுரை மேயர் இந்திராணி பதவி விலகக் கோரி அ.தி.மு.க போராட்டம்!
Property tax scam Madurai Mayor Indrani resigns DMK protests
மதுரை:மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில், மேயர் இந்திராணிக்கு எதிராக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இன்று போர்க்கொடி தூக்கியதால் மாநகராட்சி மன்ற கூட்டம் பெரும் பரபரப்புக்கு உள்ளானது.
மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், கமிஷனர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன் மற்றும் பல கட்சிகளின் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.சொத்துவரி முறைகேடு வழக்கில் பதவியிலிருந்து விலகிய 5 மண்டல தலைவர்கள் மற்றும் 2 நிலை குழு தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கருப்பு சட்டை/சேலை அணிந்து வந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள், மேயர் பதவி விலக வேண்டும் எனக் கோஷமிட்டு, மன்ற மையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.தி.மு.க. கவுன்சிலர்களும் கடும் எதிர்ப்பைக் கிளப்ப, மன்றத்தில் கூச்சல், வாக்குவாதம், குழப்பம் ஆகியவை நிலவின.
இதையடுத்து "இது மக்கள் பிரச்சனைகள் பேசும் இடம். கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. அங்கே பேசுங்கள், இங்கே கபட நாடகம் வேண்டாம்! என மேயர் இந்திராணி பேசினார்.மேயரின் இந்தக் கூற்றுக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை வெளியேற்ற காவல்துறையை அழைத்த மேயர், அதிகாரம் பயன்படுத்தினார். காவல்துறையினர் உள்ளே வந்து அ.தி.மு.க. கவுன்சிலர்களை வெளியேற்றினர்.
அப்போது மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா கூறும்போது "சொத்துவரி மோசடியில் நேரடியாக விசாரணை நடந்த மேயர் பதவி விலக வேண்டும். பலர் ராஜினாமா செய்தும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறினார்."
இது வருமான வரி மீறல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விமர்சனத்தால்
மேயர் பதவி விலகுவாரா? அல்லது சட்டரீதியான விசாரணையில் தூய்மையானவர் என நிரூபிக்கப்படுமா என்பதற்கான எதிர்பார்ப்பு நகர்மக்களிடையே வெகுவாக நிலவுகிறது.
English Summary
Property tax scam Madurai Mayor Indrani resigns DMK protests