4 மாவட்டத்தில் ஆக.30 முதல் காலவரையற்ற போராட்டம் !! தண்ணீர் லாரிகள் சங்கம் முடிவு.!! - Seithipunal
Seithipunal


சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லாரிகள் மூலம் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்க கோரி ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள போர்வெல் அனுமதிக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மருத்துவமனைகள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருப்பதால் 4 மாவட்டங்களில் உள்ள ஹோட்டல்கள் தனியார் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உண்டாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private water truck strike from August30 in 4 districts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->