வேலூர் சிறையில் இருந்து தப்பிய "எலியை'' மடக்கி பிடித்த போலீஸ்.!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த சாலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பந்தல் தொழில் செய்து வரும் சிவசுப்பிரமணியன் என்பவரின் மகன் எலி என்கிற நவீன் குமார் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். சில மாதங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் திருட்டு முயற்சியின் போது கைது செய்யப்பட்ட எலி என்கிற நவீன் குமார் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வேலூர் மத்திய சிறையில் இருந்து நவீன் குமார் தப்பியுள்ளார். இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீசார் திருச்செங்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். 

அதன் அடிப்படையில் எலியை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசாருக்கு நேற்று பெற்றோரை காண வீட்டுக்கு வந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்செங்கோடு போலீசார் எலி என்கிற நவீனை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து திருச்செங்கோடு விரைந்த வேலூர் மாவட்ட போலீசாரிடம் எலி என்கிற நவீனை திருச்செங்கோடு போலீசார் ஒப்படைத்தனர். 

வேலூர் மத்திய சிறையில் இருந்து தப்பித்த பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் உள்ள வங்கியில் கொள்ளை முயற்சியில் எலிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prisoner arrest after 8 months in namakkal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->