இலங்கை மக்களுக்கு பிரின்ஸ் ஜுவல்லரி நிறுவனம் சார்பில் ரூபாய் 25 லட்சம் நிதி உதவி.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் எரி பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, அவற்றின் விலையும் விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் எடுத்த தவறான முடிவுகளே காரணம் என்று எதிர்க் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக போராட்டங்களை நடத்தி வந்தனர்.

அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறி உள்ளது. இதனால் இலங்கையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்திலிருந்து நிதியுதவி மற்றும் பொருள் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில் பிரின்ஸ் ஜுவல்லரி நிறுவனம் சார்பில், 25 லட்சத்துக்கான காசோலையை பிரின்ஸ் ஜுவல்லரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பிரின்ஸன் ஜோஸ், இயக்குநர்கள் ஜோசப் பிரின்ஸ் மற்றும் அந்தோனி பிரின்ஸ் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prince jewellery donates twenty five lakhs for srilanka


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->