பிரதமர் மோடி பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி..வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கி பாராட்டு!
Prime Minister Modis birthday cricket match Prizes awarded and appreciation given to the winning team
வேலூரில்15 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி மற்றும் வஸ்திரதானம் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக சந்த் மகா சபா மாநிலத் தலைவர் ஸ்ரீராம் ஜி வேலூர் மாவட்ட தலைவர் V.தசரதன் மாவட்ட பொதுச் செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
வேலூர் மாவட்டம் கொணவட்டம் அடுத்த கருகம்புத்தூர் AK TV Dr சரவணகுமார் அவர்களின் தந்தை 16 வது நினைவு நாள் முன்னிட்டு மற்றும் பாரத பிரதமர் மோடி ஜி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 15 ஆம் ஆண்டு V.P.L வேலூர் ப்ரீமியம் கிரிக்கெட் லிக் போட்டி நடந்தது இதில் வெற்றி பெற்ற பெற்றவருக்கும் பங்களித்தவருக்கும் பரிசுகள் வழங்கும் விழாவும் அன்னதானம்மற்றும் வஸ்திரதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சந்த் மகா சபா மாநிலத் தலைவர் ஸ்ரீராம் ஜி வேலூர் மாவட்ட தலைவர் V.தசரதன் மாவட்ட பொதுச் செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கினார். உடன் சரவணகுமார் மாவட்ட துணை தலைவர் சக்கரவர்த்தி சமூக ஆர்வலர் லட்சி மற்றும் அனைத்து பிரிவு தலைவர்கள் அணி தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட பட்டியல் அணி தலைவர் A.K Tv.டாக்டர் சரவணகுமார் செய்தார் உடன் இவாஞ்சலின் சரவணகுமார் குமுதவதி சசிகுமார், சக்திவாணன் வசந்தி, பரந்தாமன் சரஸ்வதி, லோகேஸ்வரி அவந்திகா சரத்குமார் யுவஸ்ரீ லித்திகா நித்திஷ் குமார், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள் பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Prime Minister Modis birthday cricket match Prizes awarded and appreciation given to the winning team