தமிழகம் வரும் பிரதமா்: 33,000 காவலர்கள் பாதுகாப்பு!  - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருவதை ஒட்டி 33 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா நடைபெற உள்ளது. 

இந்த விழாவில் கலந்து கொண்டு புதிய முனையத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி திருச்சி வருகிறார். மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள 38 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார். 

இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

பிரதமர் திருச்சிக்கு வருவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், மாநகர காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

இவர்களுடன் சேர்ந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் முதல் குழு கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருச்சி வந்தது. 

இதனை அடுத்து பிரதமர் வருகையின் போது 5 அடுக்கு பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறை சார்பில், பிரதமர் மோடி திருச்சி வருகையையொட்டி 33 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister coming Tamil Nadu 33000 security guards


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->