வீட்டில் உடைந்த பனிக்குடம் - ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் லக்ஷ்மி நகர் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பழனிமுருகன் மனைவி மம்தா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று இரவு திடீரென பனிக்குடம் உடைந்து, மிகுந்த வலியுடன் துடித்து அழுதுள்ளார்.

உடனே அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காந்திபுரம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மம்தா வீட்டிற்குச் சென்று பார்க்கும் போது அவர் வலியால் துடித்ததோடு, குழந்தையின் தலையும் வெளியே வந்த படி இருந்துள்ளது.

இதைப்பார்த்த ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் மம்தாவிற்கு பிரசவம் பார்த்து அழகான ஆண் குழந்தையை வெளியில் எடுத்தனர். அதன் பின்னர் அம்புலன்ஸ் ஊழியர்கள் தாய், சேய் இருவரையும் கோவை அரசு மீனாட்சி தாய் சேய் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். பனிக்குடம் உடைந்து உயிருக்கு போராடிய பெண்ணுக்கு அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnent lady born baby at house in coimbatore


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->