பாஜக அமைச்சர் எல்.முருகன் கூட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஜூன் 8-ம் தேதி வேலூரில் நடைபெற்ற பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மும்பையில் இருந்து தனி விமான மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் வெளியே வந்த பிறகு அவர் தங்கும் நட்சத்திர ஓட்டல் வரை பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாஜக திட்டமிட்டு இருந்த பேரணி ரத்து செய்யப்பட்டு உள்துறை அமைச்சர் நேரடியாக அவர் தங்க இருந்த ஓட்டலுக்கு சென்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதை குறிப்பிட்டு முக்கிய நபர்களுக்கான பாதுகாப்பில் குறைபாடு தமிழகத்தில் நிலவுவதாக பாஜகவினர் குற்றம் சாட்டி பாஜகவினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதனை அடுத்து தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. அந்த சுற்றறிக்கையில் "அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். நிகழ்ச்சி ஆரம்பம் முதல் முடியும் வரை உதவி பொறியாளர் மின்விநியோகத்தை கண்காணிக்க வேண்டும். அவசரகாலத்தை தவிர அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சி நடக்கும் தினத்தன்று பராமரிப்பு தடைபடக் கூடாது. 

தமிழகம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் போதிய பணியாளர்கள் இருப்பதை செயற்பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அதேபோல், அவசர கால மின் தடையை சரிசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர். பாஜக பொதுக்கூட்டத்தில் படுகர் இன மொழியில் பேசி தனது உரையை எல்.முருகன் தொடங்கினார். மலைவாழ் மக்களுக்கு மத்திய பாஜக அரசு பல நன்மைகளை செய்துள்ளதாக எல்.முருகன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் பாஜக பொதுக்கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு தொற்றிக் கொண்டது. பாஜக அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மின்சாரம் துண்டிப்பது தொடர்கதையாகி வருவதாக பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power cut in BJP Minister Murugan meeting in nilagiri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->