பொது கழிப்பிடமா? குடிநீர் ஏரியா? பொதுமக்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


போரூரில் உள்ள ஏரி நீர் வறண்டு பாலைவனமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், அந்த ஏரியின் சுகாதார கேட்டை கெடுக்கும் வகையில் சிலர் நடந்துகொள்வது முகச்சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கி வந்த போரூர் ஏரியானது, தற்போது நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த ஏரி மொத்தமாக 400 ஏக்கர் பரப்பில் 600 மில்லியன் கன அடி வரை தண்ணீரை தேக்கிவைக்க முடியும். கலந்த 2017-ம் ஆண்டு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மழை இல்லாமல் தமிழகம் வறண்ட நிலையில் இருப்பதால் இந்த ஏரி முற்றிலும் வறண்டு பாலைவனம் போல காட்சியளிக்கிறது. அங்கங்கே மீன்கள் செத்து மிதக்கின்றன. குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஏரியில் சிலர் காலைக்கடன் கழிப்பது மிகவும் முகச்சுளிப்பை ஏற்படுத்துகிறது.

குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும், ஏரியை அசிங்கப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அப்போது, தான் மழை பெய்தால் சுத்தமான நீரை சேமிக்க முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

English Summary

porur lake


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal