''பொங்கல் பரிசுத்தொகுப்பு'': டோக்கன் விநியோகம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட்! - Seithipunal
Seithipunal


பொங்கல் பரிசாக 1000 ரூபாய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில் அதற்கான டோக்கன் நாளை முதல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000, பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது.

மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பொருள் இல்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக நியாய விலை கடைகளில் ரூ 1000 வழங்கப்படும் என நேற்று அறிவித்தார். 

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. 

இந்த டோக்கனில் நாள், நேரம் உள்ளிடவை இடம் பெற்றிருக்கும் எனவும் பொதுமக்கள் தங்களின் உரிய நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pongal gift token distribution issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->