24 மணிநேரத்தில் முழு கட்டுமான பணியும் நிறைவு.. தயாராகும் வீடுகள்.. மாற்றத்தை தேடி மக்கள்.! - Seithipunal
Seithipunal


இயல்பாக கான்கிரீட் கட்டிடங்கள் அமைக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை பிடிக்கும். அஸ்திவாரம் சரியாக அமைத்து, செங்கல் கட்டிடத்தை மேலே உயர்த்தி, பின்னர் மேற்கூரை கான்கிரீட் தளம் அமைப்பது என கட்டிட பணிகள் படிப்படியாக சென்று கொண்டு இருக்கும். 

இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் புதிய தொழில்நுட்பம் மூலமாக 24 மணிநேரத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்திற்கு பொள்ளாச்சி பொறியாளர்கள் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். 

பொள்ளாச்சி அருகேயிருக்கும் இராசக்காபாளையம், கோட்டம்பட்டி பகுதியில் உள்ள வீடுகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் புதிய தொழில்நுட்பம் மூலமாக தயாராகி வருகிறது.  கோயம்புத்தூரை சார்ந்த வேலன் என்கிற தனியார் நிறுவனமானது, பிரிகாஸ்ட் லெப் என்ற தொழில் நுட்பம் மூலமாக இடனாய் செய்து வருகிறது. 

ஜப்பான் போன்ற மேலை நாடுகளில் பின்பற்றப்படும் முறைகளை, நமது உள்ளூர் முறைகளுக்கேற்ப கையாண்டு மாற்றங்களை செய்து தரமான கட்டிடங்களை எளிய முறையில் கட்டியமைத்து வருகின்றனர். இதுபோன்று விரைவில் கட்டிமுடிக்கப்படும் கட்டிடங்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pollachi Building Construction by Pre Wall Design by 24 Hrs


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->