தமிழகம் முழுவதும் தங்கும் விடுதிகளில் சோதனை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கடந்த 25 நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இதனையடுத்து தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தங்கும் விடுதிகளில் வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் படி, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற சோதனையின்போது வெளியூரை சேர்ந்தவர்கள் விடுதிகளில் தங்கி இருந்தது, தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை வெளியேறும்படி தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து, போலீசார் வெளியூர் நபர்கள் தேர்தல் பரப்புரைக்காக வந்திருந்தனரா? என்று கேட்டறிந்த பிறகே, அரை ஒதுக்க வேண்டும் என்று விடுதி நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தினர். நாளை காலை தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police raide in lodges and hotels in tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->