சென்னையில் உயிரிழந்த ஓட்டுனரின் சடலம் கோவையில் மீட்பு.!!
police investigation youth body rescue in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரும், நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரும் கோவை செட்டிப்பாளையம் காவல் நிலையத்துக்கு சென்று, நாங்கள் குடிபோதையில் ஜெயராமன் என்பவரை கொன்று கிணற்றில் வீசிவீட்டோம் என்றுக் கூறி சரணடைந்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் கிடந்த ஜெயராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சரணடைந்த இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஜெயராமன், பாலமுருகன், முருகப்பெருமான் ஆகியோர் ஓட்டுநர்களாக வேலை பார்த்து வந்தனர்.
தொடர்ந்து மூன்று பேரும் இரவு நேரங்களில் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்தனர். இந்த நிலையில் வழக்கம் போல் ஜெயராமன் தனது சக நண்பர்களான பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோருடன் ஒன்றாக அமர்ந்து மது குடித்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்தது.
ஜெயராமனுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்ததால் அவர் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனால் பயந்து போன இரண்டு பேரும் ஜெயராமன் உடலை காரில் கோவைக்கு கொண்டுவந்து கிணற்றில் வீசியது தெரியவந்துள்ளது.
கோவை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட ஜெயராமன் படுகொலையில் நுங்கம்பாக்கம் தொழில் அதிபர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இதுதொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர். அவர்களின் விசாரணைக்கு பிறகு தான் ஜெயராமன் எப்படி இறந்தார் என்பது குறித்த விவரம் தெரிய வரும்.
English Summary
police investigation youth body rescue in coimbatore