விடாது விரட்டும் பொருளாதார நெருக்கடி - தனுஷ்கோடிக்கு தப்பி வந்த 8 பேரிடம் விசாரணை.!! - Seithipunal
Seithipunal


யாழ்ப்பாணத்திலிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த எட்டுபேரிடம் மத்திய, மாநில உளவுத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், இன்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடிக்கு எட்டு பேர் அகதிகளாக வந்துள்ளனர். இதையறிந்த தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் விரைந்துச் அவர்கள் எட்டு பேரையும் பாதுகாப்புடன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மரியா, விஜயகுமார் அவரது மனைவி தர்ஷிகா மற்றும் 8 வயது முதல் 16 வயதுடைய குழந்தைகள் 5 பேர் என்பதுத தெரிந்தது. 

மேலும், அவர்கள் அனைவரும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரநெருக்கடி, விலைவாசி உயர்வு, வேலையின்மை காரணமாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police investigation to eight refugees came dhanushkodi from srilanga


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->