ஆம்புலன்ஸ் ஓட்டுனரைத் தாக்கிய அதிமுகவினர் - போலீசார் தீவிர விசாரணை.!!
police investigation admk fans attack ambulance driver in edappadi palanisamy meeting in trichy
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால், அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போது முதலே தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக சார்பில் 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, எடப்பாடி பழனிச்சாமி நேற்று திருச்சி மாவட்டம் துறையூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல முயன்றது. அதனை சுற்றிவளைத்த அதிமுகவினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் பரிசோதித்தனர்.

ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியுள்ளனர். அதிமுக தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதிமுக தொண்டர்கள் தாக்கியதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police investigation admk fans attack ambulance driver in edappadi palanisamy meeting in trichy