நெல்லையில் பரபரப்பு - நீதிமன்றத்தில் ஆஜராக வந்த வாலிபர்.! ஓட ஓட விரட்டி கொலை.! - Seithipunal
Seithipunal


நெல்லையில் பரபரப்பு - நீதிமன்றத்தில் ஆஜராக வந்த வாலிபர்.! ஓட ஓட விரட்டி கொலை.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் வழக்கு தொடர்பாக நெல்லை  நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு சேரன்மகாதேவியில் உள்ள வீட்டிற்கு சென்றார்.

பின்னர் இருசக்கர வாகனத்தில் தருவையில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று கணேசனை வழி மறித்து கொலை செய்ய முயற்சி செய்தது. அவர்களிடம் இருந்து தப்பித்த கணேசன் பயத்தில் வயல்வெளிக்குள் ஓடினார்.

ஆனால், அந்தக் கும்பல் அவரை விடாமல் விரட்டிச் சென்று, அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது. இதில், படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அப்பகுதி  மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், கணேசன் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்தது. மேலும், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police investigation about man murder case in tirunelveli


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->