சிவகிரி இரட்டைக்கொலை திட்டமிட்ட சதி -  ஐ.ஜி. செந்தில் குமார் பரபரப்புத் தகவல்.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமசாமி-பாக்கியம் தம்பதியினர். இவர்கள் இருவரும் விலாங்காட்டு வலசு பகுதியில் வசித்து வருவதுடன் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்தனர்.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 1ம் தேதி வீட்டில் சட்டமாக கிடந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இருவரது உடலையும் மெட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில், கணவன், மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டதும் வீட்டில் இருந்த 12 பவுன் நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்தது. 

இதையடுத்து இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் முதிய தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன்,ரமேஷ், மாதேஸ்வரன், ஆச்சியப்பன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இது குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில் குமார் செய்தியாளர் சந்தித்துப் பேசியதாவது:
ஈரோடு சிவகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களையும் நகையையும் பறிமுதல் செய்துள்ளோம். 

உயிரிழந்தவரின் செல்போனையும் கைப்பற்றியுள்ளோம். இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஆச்சியப்பன் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் அடுத்த 2 பேரை விசாரித்தோம். மரக்கட்டையை கொண்டு இவர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர், கையுறையை பயன்படுத்திள்ளனர்.

குற்றம் நடந்த இடத்தில் இருந்த கால் பாத தடங்களை இவர்களின் பாதங்களுடன் ஒப்பீடு செய்துள்ளோம். கொள்ளையடித்த நகைகளை ஞானசேகரன் என்பவரிடம் கொடுத்து அதனை உருக்கி விற்பனை செய்ய முயன்றனர். உருக்கப்பட்ட 82 கிராம் நகையை ஆட்சியப்பன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்துள்ளோம்.

மேலும், நகையை உருக்கி கொடுத்து ஞானசேகரன் என்பவரையும் கைது செய்துள்ளோம். கூடுதல் தகவல்களுக்காக கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்படும். இந்தக் கொலை, கொள்ளைச் சம்பவம் நோட்டமிட்டு அரங்கேறியுள்ளது" என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police ig speech about sivagiri couples murder case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->