பாலியல் தொல்லையால் தற்கொலை முயன்ற மாணவி.. ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்றார்.

அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மாணவியிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து கேட்டனர்.

அப்போது, அந்த பள்ளியில் பணிபுரியும் விலங்கியல் ஆசிரியர் சாமிநாதன் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்தார். இதனை அடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police have arrested a teacher who sexually harassed a schoolgirl


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->