மீண்டும் வாலிபரின் பின்பக்கத்தை தாக்கி, உட்காரமுடியாமல் செய்த காவல்துறை.! துறையூரில் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


வியாபாரம் செய்பவர்களை மிரட்டியதாக வந்த புகாரினை தொடர்ந்து இரவில் வாலிபரை அழைத்து சென்ற காவல்துறையினர் அவரை மிகுந்த சித்திரவதை செய்து உட்கார முடியாத நிலைமைக்கு அவரை ஆளாக்கியுள்ளது துறையூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கொள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரகுநாத் என்பவர் கேரளாவில் பணிபுரிந்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். அவரை கடந்த 5ஆம் தேதி இரவு 2 மணி அளவில் துறையூர் காவலர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்மீது வியாபாரிகளை மிரட்டியதாக புகார் வந்துள்ளதாக கூறி அவரை கடுமையாக அடித்துள்ளனர். வலி தாங்க முடியாததால் ரகுநாத் அங்கிருந்த ஆல்அவுட் பாட்டிலை எடுத்து குடித்து விட்டார். உடனடியாக காவல்துறையினர் அவரை உப்பு சோப்பு கலந்த கரைசலைக் குடிக்க வைத்து வாந்தி எடுக்க வைத்துள்ளனர். 

இதனால், ரகுநாத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. பின்னர், காவல்துறையினர் தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு சென்றால் விஷயம் வெளியே தெரிந்து விடும் என்பதால் ,இந்த மாதிரியான நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவசர அவசரமாக மருத்துவர்களிடம் அறிக்கையை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இரவு நேரத்தில் மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது நீதிபதி கேட்டால் அடிக்கவில்லை என்று கூற வேண்டும் என மிரட்டியுள்ளனர். அவ்வாறு கூற வில்லை எனில் உன்னையும், உனது குடும்பத்தினரையும் குண்டர் சட்டத்தில் போட்டு விடுவோம் என்று மிரட்டி இருக்கின்றனர். 

இதனால் பயந்த ரகுநாதன் காவல்துறை கூறியதுபோல பொய் கூறி சிறைக்குச் சென்றார். கடந்த 27ஆம் தேதி ஜாமினில் வெளிவந்த ரகுநாத் இதுகுறித்து மனித உரிமை ஆணையத்திற்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police attack young men in thuraiyur 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->