என்.எல்.சி. பாமக போராட்டம்! 10 மாவட்ட போலீஸ் குவிப்பு! பணி நிறுத்தம்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தை நாசமாக்கி வரும் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், வளையமாதேவியில் என்எல்சி நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் பணிக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், அடுத்த மாதம் அறுவடை செய்ய இருக்கும் நெற்பயிர்களை ஜே.சி.பி. உள்ளிட்ட இயந்திரங்களை இறக்கி, பயிர்களை நாசமாக்கி கால்வாய் அமைக்கும் பணியில் என்எல்சி நிர்வாகம் இறங்கியுள்ளது.

இந்த நாசகார செயலுக்கு கடலூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக போலீசும் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர் என்று கூறி, நெற்பயிர்கள் அழிக்கப்படுவதற்கு விவசாயிகளும், மக்களும், பாமகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நெய்வேலியில் இன்று பா.ம.க. தரப்பில் மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கலந்துகொள்ளும் இந்த போராட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக 10 மாவட்டங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்ட போலீஸ் இந்த போராட்டத்திற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கால்வாய் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK NLC Protest Police Protection july 28


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->