வைகோ, புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் மருத்துவர் இராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு வைகோ, புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலைய செய்திக்குறிப்பில், " பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் 83- ஆவது பிறந்தநாளையொட்டி,  அவரை  மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான  வைகோ அவர்கள் இன்று பிற்பகலில்  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம் அவர்களும் மருத்துவர் அய்யா அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அதிமுகவின் சட்டப்பேரவைக் கொறடாவும், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் டுவிட்டர் பதிவுகள் மூலம் மருத்துவர் அய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Birthday wish 25 July 2021 Vaiko and Embalam Selvam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->