15000 போலீஸ்! பலத்த பாதுகாப்பில் சென்னை!  - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 9ம் தேதி தேர்தல் பரப்புரைக்காக சென்னை வர இருக்கிறார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையின் உயர் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

வருகின்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் தனது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 9ம் தேதி சென்னையில் பரப்பரை மேற்கொள்ள உள்ளார். மேலும் சென்னையில் பிரதமரின் ரோடு ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்ட வருகிறது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், பிரதமர் வருகை முன்னிட்டு சுமார் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் பிரதமர் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள் என அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என்பது குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi campaign Chennai at april 9


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->