இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி! பொங்கல் பரிசாக 5000 ரூபாய்.? அள்ளிக்கொடுக்கப்போகுது தமிழக அரசு.!! வெளியான அசத்தல் தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி அரசு வழங்கும் பரிசுத் தொகுப்பு மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுகளில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் சில பண பரிசுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு ரூ.5000 ரொக்கப் பரிசு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி மக்களில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டுகளில் அரசு வழங்கிய தொகுப்புகள்:

2020: அதிமுக ஆட்சியில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் வேட்டி-சேலை வழங்கப்பட்டது.

2021: சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு, ரூ.2500 ரொக்கப்பணம், வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட்டது.

2022: திமுக ஆட்சி ஆரம்பத்துடன், பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு, வெல்லம், முந்திரி, உலர் திராட்சை, பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு, மஞ்சள் பை ஆகிய 21 பொருட்கள் அடங்கியது. ஆனால் பண பரிசு வழங்கப்படவில்லை; சில பொருட்கள் தரமானதாக இல்லையென புகார் எழுந்தது.

2023: 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டும் பொதுமக்கள் மிக அதிக ரொக்கப் பரிசு வழங்கப்படுமென எதிர்பார்த்து காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, ஆனால் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pleasant surprise for housewives 5000 rupees as Pongal gift Tamil Nadu government is going to give away Amazing information released


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->