பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனையா.? டாஸ்மாக் நிர்வாகம் அளித்த பதில்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானம் விற்பது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசின் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மதுபான வகைகள், பீர் வகைகள் அனைத்தும் கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த முடிவு எடுத்துள்ளதாகவும், இதனால் சுற்றுசூழல் மேலும் சீர்கேடு அடையும் என்றும் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் விளக்கம் அளித்துள்ள டாஸ்மாக் நிறுவனம், "மதுபானங்களை கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவை சேர்ந்தது. எனினும் இதுவரை பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கண்ணாடி பாட்டில்களில்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Plastic bottle wine tasmac in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->