#கோவை | உச்சகட்ட பாதுகாப்பு பணியில் போலீசார் - போராட வந்த இஸ்லாமிய பெண்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்! - Seithipunal
Seithipunal


முஸ்லீம் சமுதாய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பு, தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர் நிகழ்வின்போதும் மக்களுக்கு சேவை செய்து வந்தது. 

அதகே சமயத்தில் நாடு முழுவதும் இந்த அமைப்புமீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக பயங்கரவாத கும்பலுக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பின் மீது தொடர் புகார் எழுந்து வந்தது.'

புகார்களின் அடிப்படையில், கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கத் துறை இணைந்து சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் 356 பேர் கைது செய்யப்பட்டனா். மேலும், சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் பிஎஃப்ஐ அமைப்பு மற்றும் அதன் 8 துணை அமைப்புகள் சட்டவிரோத இயக்கமாக அறிவித்த மத்திய அரசு, 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், கோவை மாநகரில் பதட்டம் மிகுந்த பகுதிகளில் ஒரு காவல்நிலையத்திற்கு  ஒரு எஸ்.பி. என்ற அடிப்படையில் 6 எஸ்.பி.க்கள் நியமனம் செய்யப்பட்டு தீர்விர பாதுகாப்பு பணியில் ஈடுபத்துப்பட்டு உள்ளனர்.

மேலும், 28 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, கோவை : உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக போராட்டம் நடத்துவதற்காக திரண்ட PFI -SDBI அமைப்பை சேர்ந்த  இஸ்லாமிய பெண்களை, கோவை மாநகர காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PFI Ban Issue Kovai Full Police Secure


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->