உயிரிழந்ததாக புதைக்கப்பட்ட நபர் மீண்டும் வீட்டிற்கு வந்ததால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கீழே விழுந்து தலையில் அடிபட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சையில் இருந்த முதியவர் உயிரிழந்ததால் அவரின் அடையாளம் தெரியாமல் காவல்துறையினர் தவித்துள்ளனர். இந்த நிலையில் அந்த முதியவரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு போலீசார் அடையாளம் காண முயற்சி செய்தனர்.

அந்த புகைப்படத்தை திண்டுக்கல் அடுத்த பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் பார்த்து அது தங்களின் உறவினர் பழனிச்சாமி எனக்கூறி உடலைப் பெற்று அடக்கம் செய்துள்ளனர். இந்த நிலையில் இறந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்ட பழனிச்சாமி நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளார். அவரைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களில் சுற்றி தெரிந்து விட்டு வீடு திரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரை போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று அடையாளம் காட்டியுள்ளனர்.  காணாமல் போன பழனிச்சாமி இவர் என்றால் புதைக்கப்பட்ட உடல் யாருடையது என போலீசார் மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

person who was buried dead came back home


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->