#திருப்பத்தூர் || கிராம சபை கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


மகாத்மா காந்தியின் 155-வது ஜெயந்தி நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில் பொதுமக்கள் தங்கள் குறைகளை எடுத்துக் கூறினர். மேலும் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அருகே ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் போயர் இன மக்கள் பன்றி வளர்ப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை பன்றி வளர்க்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் கிராம நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே அவர் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பன்றி வளர்க்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை கூறி தான் மறைத்து வைத்திருந்த டீசலை தனது தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீக்குளிக்க முயன்ற மாரியப்பனை தடுத்து தலையில் தண்ணீரை ஊற்றிய அவரைக் காப்பாற்றி அழைத்துச் சென்றனர். இதனால் அந்த கிராம சபை கூட்டம் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

person tried to set fire to the grama sabha near Tirupattur


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->