கள்ளக்காதலியுடன் சேர்ந்து சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகைகளை திருடிய நபர்.! - Seithipunal
Seithipunal


சென்னை பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர் (வயது 40) இவரது தம்பி ராஜேஷ் (வயது 37) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களது தாயாருடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஸ்வீட் கடை உள்ளது. மேலும் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் திரும்பி வந்த அவர் பீரோவில் வைத்துச் சென்ற 300 சவரன் நகையை பார்த்த போது அது காணவில்லை. 

இதனையடுத்து ராஜேஷ் தனது சோதனை செய்த போது தனது மனைவி மற்றும் அம்மாவின் சுமார் 200 சவரன் நகையும், 5 தங்க கட்டிகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனையெடுத்து இச்சம்பவம் குறித்து ராஜேஷ் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அண்ணன் சேகர் 550 சவரன் நகையை திருடி அவரது தோழியான இளம்பெண்ணிடம் கொடுத்திருப்பது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் போலீசார் சேகரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவருக்கும் வேளச்சேரி கேசரிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி(வயது 22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

மேலும் வீட்டிலிருந்த 550 சவரன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக தோழி ஸ்வாதியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஸ்வாதிக்கு காரும் வாங்கிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகையை திருடிய சேகர் மற்றும் அவரது தோழி ஸ்வாதியை பூந்தமல்லி போலீசார் கைது செய்து ஸ்வாதியிடமிருந்து கார் பறிமுதல் செய்தனர். மேலும் நகைகளை எங்கே வைத்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து மேற்க்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

person stole 550 pieces of jewelery from his own house along with a thief


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->