2023 ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் விருது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு கடந்த 1995ஆம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை தேர்வு செய்து சமூகநீதிகான தந்தை பெரியார் விருது வழங்கி வருகிறது. 

இந்த விருதை பெறுபவருக்கு ரூ. 5 லட்சம் பணமும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. அதே போல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி வருகிறது. 

இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை, ஒரு பவுன் தங்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் அம்பேத்கர் விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, 2023 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப. வீரபாண்டியன் தேர்வு தேர்வாகியுள்ளார். 

2023 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சண்முகம் தேர்வாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை வழங்கி கௌரவிக்க உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Periyar Dr Ambedkar Award for 2023 TN Govt Announcement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->