பெரம்பலூர் பாலியல் விவகாரம்!! வக்கீல் அருள் மனைவி வழக்கு!! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மற்றும் வழக்கறிஞரான அருளை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல இளம் பெண்களிடம் அதிமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.

இது குறித்து பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர் ஆதாரமாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பேசிய ஆடியோவை வெளியிட்டதாக கூறி, ஒரு போலி ஆடியோவை தயாரித்து வெளியிட்டார். இந்த போலி ஆடியோவின் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  பல பெண்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இதன் காரணமாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவரது மனைவி தமிழரசி (மே 21 )நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் என் கணவரை குண்டர் சட்டத்தில் அதைத்ததற்காக எந்த ஒரு ஆவணங்களையும் தமிழில் கொடுக்கவில்லை.

அவர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க அருள் மீது குண்டர் சட்டம் ஏவப்படுகிறது' என தெரிவித்துள்ளார். இந்த மனுவின் மீது நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perambalur advocate wife filed a case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->