மக்களுக்கு ஓர் அறிவிப்பு - பொங்கல் பரிசு வாங்க துணிப்பை கட்டாயம்.!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் தாலுகாவில் 80,420 பேருக்கு பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.ஆயிரம் பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ வெல்லம், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 

இந்த நிகழ்ச்சியை 9-ந் தேதி நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்படும். 

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் உணவு பொருள் வழங்கல் துறையினர் செய்து வருகிறார்கள். பல்லடம் பகுதியில் உள்ள 134 நியாயவிலைக்கடைகளில் 80,420 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. நியாய விலைக்கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படுகிறது. 

இதனை அந்தந்த பகுதி நியாயவிலைக்கடை ஊழியர்கள் வீடுவீடாக சென்று வழங்கி கொண்டிருக்கிறார்கள். அந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. 

இந்நிலையில், கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களை துணிப்பையில் போட்டே அரசு வழங்கியது. ஆனால், இந்த முறை துணிப்பை வழங்கப்படாது என்றும், பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் துணிப்பை எடுத்து வந்து பொங்கல் பரிசுப் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples shounld bring cloth bags for buy pongal gift


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->