60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளலாம் - தமிழக போக்குவரத்துக்கு கழகம் அசத்தல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில் அரசுப் பேருந்துகளில் அதிகம் பேர் பயணிக்கின்றனர். 

அது போன்ற நேரங்களில் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்ய முடிவதில்லை. இந்த நிலையில், அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் நாட்கள் 30இல் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் முப்பது நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை இதுவரையில் நடைமுறையில் இருந்து வந்தது. 

இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக 15.03.2024 முதல் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மேற்கண்ட வசதியைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். 

இதன் மூலம் சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள் விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர் செல்வதற்கு மிகக் குறைந்த கட்டணத்தில் எளிதாக செல்ல முடியும்" என்று தெரிவிக்கப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

passengers ticket booking in govt bus before sixty days tn transport info


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->