பயணிகள் அவதி! தடம் புரண்டு விபத்துக்குள்ளான சரக்கு ரெயில்...!
Passengers suffer Freight train derails and crashes
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.மேலும், சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு அரக்கோணம் வழியாக சென்ற சரக்கு ரெயில் நார்த் கேபில் என்ற இடத்தில் தடம் புரண்டது.

இந்த சரக்கு ரெயில் தடம் புரண்டதை அடுத்து, சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், சென்னை- திருத்தணி மின்சார ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுத்தொடர்பாக தகவல் அறிந்து, தடம் புரண்ட 3 பெட்டிகளை சரி செய்யும் பணியில் பணியாளகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்,ரெயிலில் பயணிக்கும் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதனால், சென்னை- பெங்களூரு செல்லும் ஹூப்ளி ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
English Summary
Passengers suffer Freight train derails and crashes