எங்கள் கூட்டணி கண்டிப்பாக வெற்றிபெறும்..அடித்து கூறும் தமிழிசை சவுந்தரராஜன்!
Our alliance will definitely succeed firmly states Tamizhisai Soundararajan
நாடு விரிவடையும்போது, தேசம் விரிவுபடும்போது உலக அரங்கில் நாடு முன்னேறும்போது 3 மொழி தேவைப்படுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-விஜய் மாநாட்டிற்கு பிளாக்கில் சாப்பாட்டிற்கு டிக்கெட் கொடுக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கும், எங்களுக்கும் தான் போட்டி.மிஸ்டர் பி.எம். என்று நடிகர் விஜய் கூறுவதை மக்கள் ரசிக்க மாட்டார்கள்.
தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டாம். அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு பா.ஜ.க. வளரப்போகுது. தம்பி விஜய் இதனை பார்ப்பார்.தமிழக முதலமைச்சர் அப்பா என்று கூப்பிட சொல்கின்றார். இவர் அங்கிள் என்ற குறிப்பிடுகிறார், நானே பயந்து விட்டேன்.
கச்சத்தீவு மீட்பு பற்றி பேசுகிறார். இதிலிருந்து அவருக்கு அரசியல் ஞானம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பொருந்தாதது என்ற விஜய் கூறுகிறார்.
பாரத பிரதமர் என்ன செய்தார் என்று கேட்கின்றார். சினிமா வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி தான் காரணம்.விஜய்யால் ஒரு மாநாட்டை ஒழுங்காக நடத்த முடிந்ததா? ஒரு கொடியை ஒழுங்காக நட முடிந்ததா?. எனவே இவர் சொல்வதை பொருட்படுத்த தேவையில்லை. அ.தி.மு.க. பாஜக கூட்டணி வெற்றி பெறும்.
. நாடு விரிவடையும்போது, தேசம் விரிவுபடும்போது உலக அரங்கில் நாடு முன்னேறும்போது 3 மொழி தேவைப்படுகிறது. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிற்கு 3 மொழிகளில் டுவீட் செய்தார்.
தி.மு.க. கட்சிக்காரர்கள் நடத்தும் பள்ளிகளில் 3மொழி உள்ளது. 3 மொழி படித்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகம் வளர்ந்து இருக்கிறது. அதில் அனைவரின் பங்கு இருக்கிறது.
தி.மு.க. காங்கிரஸ் ஆட்சி செய்தபோது இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழை பற்றி பேசும் தகுதி உங்களுக்கு உள்ளதா? தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Our alliance will definitely succeed firmly states Tamizhisai Soundararajan