பிற மதத்தினர் கோவிலுக்குள் வர தடை இல்லை.! ஆனால் ஒரு கண்டிஷன்.!! - அமைச்சர் சேகர் பாபு.!! - Seithipunal
Seithipunal


இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பழனியில் வைக்கப்பட்டிருந்த பேனர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "கோயில்கள் என்பது இந்துக்களின் அடையாளம். இந்துக்கள் வழிபாட்டு முறைகளை ஏற்றுக் கொண்டு வருவதென்றால் எந்த மதத்தினரும் வழிபாடு மேற்கொள்ளலாம். இந்துக்களில் வழிபாட்டு முறையை ஏற்றுக் கொண்டு வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை.

மற்ற மதத்தின் அடையாளத்தோடு வருவதால் மட்டுமே பிரச்சனைகள் ஏற்படுகிறது. பழனியில் வைக்கப்பட்டு இருந்த பலகை குறித்து எனக்கு தெரியாது. திராவிட மாடலை பொருத்தவரை எம்மதமும் சம்மதம். சகோதரத்துவத்துடன் அண்ணன் தம்பி போல் வாழ வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Other religious people can enter inside temple if accept Hindu system


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->