ரேஷன் கடையை விடுங்க.. தக்காளி "2 கிலோ ₹100" தான்.. லோடு வண்டியை ரவுண்டு கட்டிய மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவ மழையின் காரணமாக தக்காளி வரதுக்கு குறைந்ததால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த கொள்முதல் விலை ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ தக்காளி ₹60க்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தை இன்று காலை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டிலேயே சென்னையில் உள்ள ரேஷன் கடையில் மட்டும் தான் தக்காளி மிக குறைவான விலையில் கிடைக்கும் என நாம் நினைத்திருப்போம்.

ஆனால் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவர் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்த‌த்தில் வேன் மூலம் மொத்த வியாபாரிகள் நேரடியாக பொதுமக்களுக்கு 2 கிலோ தக்காளி 100 ரூபாய் என கூவி கூவி விற்றுள்ளனர்.

இதனைக் கண்ட குடியாத்தம் பகுதி மக்கள் அதிகளவில் தக்காளியை வாங்கிச் சென்றனர். விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கி பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதால் குறைந்த விலையில் விற்க முடிகிறது என தக்காளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ரேஷன் கடையை விட 10 ரூபாய் குறைவாக தக்காளி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One kg tomato is sold at Rs50 in gudiyatham


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->