ஆம்னி பேருந்து ஓடுமா? ஓடாதா? சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை!! - Seithipunal
Seithipunal


பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்ததாக 120 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழகம் முழுவதும் இன்று மாலை 6:00 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்தது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள நிலையில் ஸ்டிரைக் அறிவிப்பால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் அமைந்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இல்லத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. 

அதற்கு பதிலாக இன்று பிற்பகல் 12 மணிக்கு போக்குவரத்து இணை இயக்குநருடன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தமிழக அரசால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து ஆம்னி பேருந்துகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தையானது நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்குள் ஆம்னி பேருந்துகள் ஸ்ட்ரைக் குறித்தான இறுதி முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Omni bus owners hold talks with govt officials at 12 p.m


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->