நடிகர் அஜித் வீட்டின் சுற்றுசுவரை இடித்த அதிகாரிகள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், தனது குடும்பத்தினருடன் சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பைக் ரேசிங், துப்பாக்கிச் சுடுதல் மற்றும் ட்ரோன்கள் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது, இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரது வீடு அமைந்துள்ள பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை நீர் செல்வதற்காக சாலை விரிவாக்க பணிகள் மற்றும் வடிகால் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால், அப்பகுதியில் உள்ள பலருடைய வீட்டின் சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடிகர் அஜித்குமாரின் வீட்டின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியும் இயந்திரத்தின் மூலம் அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, நடிகர் அஜித்குமாரின் வீட்டிற்கு வெளியில் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதால், வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்று வர தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது என்று விளக்கம் அளித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

officers demolished actor ajith house compound


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->