இன்னும் 3 நாள் தான் இருக்கு... போராட்டத்திற்கு கெடு வைத்த சீமான்..!!
ntk leader seeman announce protest against ajithkumar death incident
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார், காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய ஆலம்பட்டியை சேர்ந்த பேராசிரியை நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து போலீசார் நிகிதாவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், கடலூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:- "வரும் 8-ந்தேதி காலையில் அம்மாவை போய் பார்த்துவிட்டு எங்கள் போராட்டம் தொடரும்.

கள்ளச்சாராயம் குடித்து செத்தால் ரூ.10 லட்சம் கொடுக்கும் தமிழக அரசு, காவலர்கள் அடித்து செத்தால் ரூ.5 லட்சம்தான் கொடுக்கிறது. ஒரு எளிய மகன் நானே எங்கள் அம்மாவுக்கு ரூ.5 லட்சம் கொடுக்கிறேன். என்னது இது... அவ்வளவுதான் உயிருக்கு மதிப்பா?
குற்றவாளி நிகிதா மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவேன். இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கிறது என்றார். அப்போது செய்தியாளர்கள் தரப்பில் இருந்து த.வெ.க. தலைவர் விஜய் அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், என் அரசியலை தான் நீங்கள் என்னிடம் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
English Summary
ntk leader seeman announce protest against ajithkumar death incident