குப்பை தூக்கும் கைகளுக்கு இப்போது சத்தான உணவு! – டிசம்பர் 6 முதல் தமிழகத்தில் புதிய வரலாறு! - Seithipunal
Seithipunal


பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்காக அறிவிக்கப்பட்ட இலவச ஊட்டச்சத்து உணவுத்திட்டம் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பங்கேற்று, திட்டத்தின் முதல்கட்ட செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.

மாநிலத்தின் 31,373 தூய்மைப் பணியாளர்களுக்கு இந்த திட்டம் ஒரு ஓய்வில்லா உழைப்புக்கு மரியாதை என அரசு தெரிவித்துள்ளது.இன்று முதல், சென்னை முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றும் தெருக்கள், சாலைகள் மற்றும் சேவை மையங்களிலேயே நேரடியாக சென்று உணவு வழங்கும் நடைமுறை அமலாக்கப்படுகிறது.

இதன் மூலம் அவர்கள் வேலைநேரத்தை இழக்காமல் உணவு கிடைக்கும் உறுதிப்பாடு உருவாகிறது.வருகிற டிசம்பர் 6ஆம் தேதி முதல், இந்த உணவுத்திட்டம் தமிழகம் முழுவதும் மொத்தம் 24 மாநகராட்சிகள் மற்றும் 145 நகராட்சிகளிலும் விரிவாக்கப்பட உள்ளது.

இதன் பயனாளர்கள் எண்ணிக்கை 72,000-ஐ தாண்டும் என அரசு தெரிவித்துள்ளது.உணவுப் பட்டியலும் சத்தான வகையில் அமைக்கப்பட்டுள்ளது:காலை / மாலை: இட்லி, வடை, ஸாம்பார், பொங்கல், கிச்சடி
மதியம்: கலவை சாதம், பலவகை காய்கறிகள், ஊட்டச்சத்து பொருட்கள்
இதன் மூலம் தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் மூன்று வேளையும் சத்தான, சுகாதாரமான, இலவச உணவு கிடைக்கப் போகிறது. அரசு நிர்வாகம் இந்த திட்டத்தை “தூய்மைக்கு உழைக்கும் வீரர்களுக்கு நன்றி சொல்லும் செயல்” என விவரிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Now there nutritious food garbage collectors New history Tamil Nadu from December 6th


கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?




Seithipunal
--> -->