வடகிழக்கு பருவமழை: பொது சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய சுற்றறிக்கை! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழையை முன்னிட்டுப் பொது சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் முக்கிய விவரங்கள்:

அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்: அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

சுற்றுப்புறச் சுகாதாரம்: எதிர்நோக்கும் பருவமழை காலத்தில் தொற்றுநோய் பரவலைத் தடுக்க அரசு வளாகங்களில் சரியான சுற்றுப்புறச் சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டும்.

தொடர் ஆய்வுகள்: அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் விடுதி வளாகங்களில் கொசுக்கள் உற்பதியாவதும் எலிகள் பெருகுவதைத் தடுக்கத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தேவையற்ற கழிவுகளை அகற்றுதல்: தேங்கும் மழை நீரையும், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான டயர்கள், உடைந்த பாத்திரங்கள் போன்ற தேவையற்ற கழிவுகளை அகற்ற வேண்டும்.

மருத்துவச் சிகிச்சை மற்றும் தகவல்: ஊழியர்கள், மாணவர்கள் அல்லது விடுதி வாசிகளுக்குக் காய்ச்சல் அல்லது பிற நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவச் சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும். மேலும், ஒரே நேரத்தில் பலருக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டால் உடனடியாகச் சுகாதார அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Northeast Monsoon Public Health Department Issues Important Circular


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->