#சற்றுமுன்: டிரைவிங் லைசென்ஸ் பெற இனி இந்த கண்டிஷன் இனி இல்லை.!! மத்திய அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு வாகன ஓட்டுநர் உரிமம் பெற குறைந்த பட்ச கல்வி தகுதியாக 8-ம் வகுப்பு கல்வியை நிர்ணயித்து இருந்தது. தற்பொழுது அதில் திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " சமூகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், வாகன ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதியை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை நீக்க, முடிவு செய்துள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் 1989, விதி 8-ன் படி குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி போக்குவரத்து வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், பல வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மேலும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் கல்வித்தகுதி பெறவில்லை என்றாலும், எழுதப் படிக்க தெரிந்தவர்காளாக இருக்கின்றனர். 

அண்மையில் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், ஹரியாணா மாநில அரசு ஓட்டுநர்களுக்கான கல்வித் தகுதியை நீக்குமாறு வலியுறுத்தியது. ஓட்டுநர்களுக்கு அவர்கள் சார்ந்த துறையில், உரிய திறன் தேவையே தவிர, கல்வித்தகுதி என்பது தேவையற்றது என இதனைப் பரிசீலித்தபோது தெரியவந்தது. 

எனவே, ஓட்டுநர் உரிமத்திற்கான கல்வித் தகுதி நீக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக பலருக்கு வேலை கிடைக்கும். எனவே, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை 1989-ம் ஆண்டு மத்திய மோட்டார் வாகனச் சட்ட விதி 8-க்கு திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதுகுறித்த வரைவு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்'' என அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no education limit for driving license


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->