"உங்க அப்பன் வீட்டு வண்டியா?" வைரலான பன்னீரை பணியிடை நீக்கிய அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கூடலூர் பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் பந்தலூர் அருகே உள்ள அய்யன்கொல்லி நீண்ட நேரமாக கைக்குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்த பெண் பேருந்து நிறுத்துமாறு கை அசைத்துள்ளார்.

ஆனால் அரசு பேருந்து நிறுத்தாமல் ஓட்டுனர் பன்னீர் என்பவர் இயக்கியுள்ளார். அதன் பிறகு மற்றொரு வாகனம் மூலம் பேருந்து நிலையம் வந்த பெண்மணி "பேருந்தை ஏன் நிறுத்தவில்லை?" என ஓட்டுனரிடம் கேட்டுள்ளார். அதற்கு அரசு பேருந்து ஓட்டுனர் "உன் அப்பா வீட்டு பேருந்தா?" என பெண்மணியை மிரட்டும் வகையில் பேசியது  பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பேருந்து ஓட்டுனர் பன்னீர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இணையதள வாசிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் பெண் பணியை தரக்குறைவாக பேசிய அரசு பேருந்து ஓட்டுனர் பன்னீரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nilgiris govt bus drivers suspended


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->